கதை

இலங்கை தனது 100 வது சுதந்திர ஆண்டு விழாவை 2048 ஆம் ஆண்டில் கொண்டாடும் போது, நமது தேசம் அதன் சமூக-அரசியல் மற்றும் பொருளாதார நிலப்பரப்பில் ஒரு மாற்றத்தை அனுபவித்திருக்கும் என்று நம்புகிறோம். ஒரு தலைமுறையாக, வன்முறை மோதலில் சிக்கி மற்றும் ஊழலால் பேரழிவிற்குள்ளான ஒரு நாட்டை நாம் பெற்றோம். நாம் மரபுரிமையாக கொண்டவற்றின் மீது நம்மிடம் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், அடுத்த தலைமுறையினருக்கு சேவை செய்வதற்கான பொறுப்பு மற்றும் பாக்கியம் நமக்கு இருக்கிறது. ஒரு நியாயமான, வளமான , புதுமையான சமுதாயமாகவும், வன்முறை மற்றும் துரதிர்ஷ்டவசமான வரலாற்றிலிருந்து மீண்டு வரும் ஒரு நாட்டின் மாதிரியாகவும் கொண்டாடப்படும் ஒரு தேசத்தை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

JOIN THE CENTENARY MOVEMENT

தூண்கள்

கனவு

100வது  வெற்றிக்கான 10 குறிகாட்டிகள்

  • அமைதியான மற்றும் நியாயமான சமுதாயத்திற்குள் உள்ளடக்கிய இலங்கையர் எனும் அடையாளம்.

  •  இனம், பாலினம் மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் பாகுபாடு காட்டாமல்.

  •  பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான, நியாயமான நாடு.

  • குறைந்த அளவு ஊழல்.

  •  அபிவிருத்தி அடைந்த மற்றும் செழிப்பான பொருளாதாரம்.

  • சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான ஒரு முன்மாதிரியாக இலங்கையை அங்கீகரித்தல்.

  •  பூஜ்ஜிய அளவு வறுமை.

  • கல்வி மற்றும் சுகாதாரத் தரத்தின் தர  நிலைகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம். 

  •  கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கான அங்கீகாரம்.

  • தேவைப்படும் பிற நாடுகளுக்கு உதவிகளை வழங்க கூடிய தாராள தேசமாக இருக்க வேண்டும்.