நோக்கம்

To energize, equip, enable a new generation to effectively and strategically lead Sri Lanka to her Centenary of independence.

கட்டமைப்பு மற்றும் காலம்

ஒரு வருட காலத்தை கொண்ட இக்கலைக்கூடம், 2020 மாசி மாதத்தில் இருந்து 2021 மாசி மாதம் வரை நடைபெறும். ஒவ்வொரு அமர்வும் வார இறுதியில் 6 மணித்தியாலங்கள் இணையவழி மூலமாகவும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி வார இறுதியில் இரண்டு நாள் குடியிருப்பு பயிற்சிகளை கொண்டது.

பங்கேற்பாளர்களுக்கு தங்களைப் போன்ற பிற மாவட்டங்களை பிரதிநிதி படுத்தும் சகா பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறியை கற்றுக் கொள்வதன் ஊடாக அவர்களது திறமையையும் அறிவையும் வளர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பம் அளிக்கப்படும். ஒவ்வொரு அமர்வும் இலங்கையின் தலைசிறந்த துறை நிபுணத்துவம் கொண்டவர்களிடமும் இலங்கையின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் இடம் இருந்து கற்றுக்கொள்ளும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடநெறிகளை கேட்கவும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

மாதக்கடைசியில் வார இறுதியில் நடைபெறும் இரண்டு நாள்குடியிருப்பு பயிற்சியின்போது தங்களுடைய சக பங்கேற்பாளர்கள் உடன் நேருக்கு நேர் கலந்துரையாடவும் தங்களது சிந்தனையை பரிமாறிக் கொள்வதாகவும் அமையும். குடியிருப்பு பயிற்சியானது பங்கேற்பாளர்களை நூற்றாண்டின் இலங்கையின் கொள்கைகளை ஆழமாக புரிந்து கொள்வதற்கான தீவிரமான அமர்வுகளாக அமையும்.

ஒவ்வொரு பங்கேற்பாளர்களுக்கும் கல்வி ஆண்டில் கற்றுக்கொள்ளும் கருத்துப் பொருட்கள் மற்றும் தலைப்புகள் கொண்ட விரிவான பாடத்திட்டம் வழங்கப்படும். இதை மையமாகக் கொண்டே வள நிபுணர்கள் தங்களது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வார்கள்.

கல்வியாண்டின் இறுதியின் பொழுது ஒவ்வொரு பங்கேற்பாளரும் இன்னொரு பங்கேற்பாளர் உடன், அந்தந்த துறையை சேர்ந்த வழிகாட்டி ஒருவருடன் குழுவாக படுவார்கள். இந்த மூன்று மாத வழிகாட்டல் நீரல், பங்கேற்பாளர்களை நிபுணத்துவம் பெற்ற தொலைநோக்கு பார்வையாளர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதுடன் இவர்களது வலையமைப்பை பகர்வதுடன் அறிவையும் அனுபவத்தையும் பகிர்வார்கள்.

 1. முன்னோக்கிய பார்வை
 • உங்களது தனிப்பட்ட மதிப்பை புரிந்துகொண்டு விவரணையாக்கம் செய்தல்
 • ஒருவரின் தனிப்பட்ட கதை/ தொழில் வாழ்க்கையுடன் ஒத்திசைவான ஆழமான பிரதிபலிப்பு
 • தனிப்பட்ட பார்வை மற்றும் பணி அறிக்கையை வெளிப்படுத்தல்
 • தனிப்பட்ட வலையமைப்பை விவரணையாக்கள்

2. அடிமட்ட பிரச்சாரம்

 • அமைப்புக்கள் சார்ந்த சிந்தனை மனநிலையை உருவாக்குதல்
 • சமூக ஒழுங்கமைப்பின் வெவ்வேறு மாதிரிகளைப் புரிந்து கொண்டு ஒப்பிடுதல்
 • ஆண்டு முழுவதுக்குமான அடிமட்ட பிரச்சாரங்களை SMART இலக்குகளுடன் வரைபடமாக்குதல்
 • கூட்டு வேலை மற்றும் மக்கள் மேலாண்மை
 • நிதி திரட்டல்
 • வாக்காளர் உளவியல்

3. உள்ளூர் சூழலை புரிதல்

 • கணக்கெடுப்புகள் மற்றும் சமூக கலந்துரையாடல்களை நடத்துதல்
 • சூழ்நிலை படுத்துதல் சார்ந்த கற்றல்

4. கொள்கை உருவாக்கம்

 • கொள்கை என்றால் என்ன? நல்ல கொள்கையை உருவாக்குவது எது?
 • சில பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் குறித்த ஆய்வுகள்

5. நிதி

 • தனிப்பட்ட நிதி
 • பிரச்சார நிதி
 • அரச நிதி 

6. தொடர்பாடல் மற்றும் அடையாளம்

 • அழியாத கருத்துக்களை உருவாக்குவது எது?
 • தனிப்பட்ட அடையாளம்
 • பேச்சு எழுதுதல்
 • வலை அமைப்பை உருவாக்குதல்
 • சமூக வலைத்தளங்களில் விவாதம்
 • பொதுப் பேச்சு / தனிப்பட்ட வளர்ச்சி
கொள்கை தொகுதிகள்

அடிப்படை கருத்து பொருட்களைத் தவிர, நூற்றாண்டின் இலங்கை கவனம் செலுத்தும் 5 முதன்மை கொள்கை தொகுதிகள் கற்பிக்கப்படும்.

 • தற்போதைய அரசியல் நிலப்பரப்பு மற்றும் 1948 முதல் அரசியல் பரிணாமம்.
 • வெவ்வேறு அரசியல் அலுவலகங்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள்
 • அதிகாரங்கள் மற்றும் அதிகாரங்களின் கட்டுப்பாடு
 • சட்டமன்ற அமைப்பு மற்றும் ஒரு மசோதாவை எவ்வாறு உருவாக்குவது?
 • 13A, 19A, 20 A : எதைப் பற்றியவை?
 • தற்போதுள்ள அரசியல்/ அரசியலமைப்பு கட்டமைப்பில் உள்ள இடைவெளிகள்
 1. வழக்கு ஆய்வுகள்
 • இரு கட்சி
 • சட்ட சீர்திருத்தங்கள் ( உள்நாட்டு வன்முறை / MMDA)
 • பாலினம் மற்றும் ஆளுமை

2. உங்கள் அங்கத்தினர்களை ஈடுபடுத்தி வழிநடத்துதல் (வாக்காளர் தொகுதியில் குடியிருப்பாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை வரைபடமாக்குதல்)

3. வலையமைப்பை உருவாக்குதல் மற்றும் தொடர்பாடல்

4. நிதி திரட்டும் உத்திகள்

 • அடிமட்ட நிதி திரட்டல் மற்றும் பெரிய நன்கொடைகளை நம்பி இருப்பதன் நன்மை தீமைகள்

5. உங்கள் நிலைப்பாட்டை எவ்வாறு பாதுகாப்பது?

இன மற்றும் மத பல்வகைமை ; வரலாறு உட்பட மன குறைகளும் தீர்வுகளும்

பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்; குறிப்பாக முடிவெடுக்கும் பாத்திரங்களை எடுத்துக் கொள்வதோடு, பொது வாழ்க்கையில் அவர்கள் முழு பங்களிப்பு தருவதற்கான தடைகளையும் தனியார் வாழ்க்கையில் சமத்துவம் பெறுவதற்கான தடைகளையும் நிவர்த்தி செய்தல்

குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சமத்துவம் மற்றும் அவர்களின் மதிப்பு; சட்டத்தை மாற்றுவதன் மூலமாக கல்வி, உள்ளடக்க கொள்கைகளில் மாற்றம்

 • பறந்து பொருளாதாரத்தின் உறுதியை உறுதி செய்தல்
 • பொருளாதார வளர்ச்சியை தூண்டுதல்
 • எதிர்காலத்துக்கு தயாரான பொருளாதாரத்தை மாற்றியமைத்தல்
 • வணிகம் செய்ய உகந்த சூழலை உருவாக்குதல்
 • சுருக்கமான வரலாறு மற்றும் இலங்கையின் தேசிய சுகாதார கொள்கை அறிமுகம்
 • ஒரு பெண் இசியான பரவலாக்கப்பட்ட சுகாதார கொள்கையின் அடிப்படைக் கொள்கைகள். இதை நடைமுறைப் படுத்தல். தேசத்திற்கான சுகாதாரக் கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்தல்.
 • சுகாதாரத்துறையில் நடைமுறை சவால்களை அடையாளம் காணுதல்; A .வள ஒதுக்கீடு மற்றும் இயங்க வைத்தல் B. பிரச்சார நிதி C. மனிதவள முகாமைத்துவம்
 • நிர்வாகம் (நிர்வாக கட்டமைப்புகள்) மற்றும் பங்குதாரர்களின் ஈடுபாட்டை மையமாகக் கொண்டு சுகாதாரத் துறையின் செயல்பாடு
 • ஆரோக்கியத்தின் எதிர்காலம்; புதுமைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மருத்துவ தகவல், தகவல் அமைப்புகள் மற்றும் சுகாதார மேம்பாடு மற்றும் பொது-தனியார் கூட்டு திட்டங்கள்.
 • சமீபத்திய தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு, மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை எவ்வாறு உருவாக்குவது.
 • நோயாளியின் பராமரிப்பை வழங்குவதில் செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த தீவிர தரவு சேகரிப்பு மற்றும் தரவு மேலாண்மை.
 • தொற்றுநோய்கள், இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் போன்ற திடீர் பேரழிவுகளுக்கான தயார்படுத்தல் மற்றும் நெருக்கடி மேலாண்மை 
 • உள்நாட்டு வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகம், இனப்பெருக்க ஆரோக்கியம், மனநலம் மற்றும் பாலின உள்ளடக்கம்.

சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை

 1. காலநிலை மாற்றத்திற்கான அறிமுகம்
  • முக்கிய விதிமுறைகள் மற்றும்
  • கருத்துகளை வரையறுத்தல் (உதாரணம் – காலநிலை  Vs வானிலை)
  • உலகளாவிய நிகழ்வு, வரலாறு, பெருகிவரும் அச்சுறுத்தல்
 2. இலங்கையின் உயிர் பல்வகைமை மற்றும் காலநிலை மாற்றம்
  • நுண் காலநிலையின் பங்கு
  • தற்போதைய உண்மை மற்றும் கணிப்புகள் (புள்ளிவிவரங்கள்)
  • நடைமுறையில் உள்ள கொள்கைகள் மற்றும் வெற்றிடங்கள்
 3. முரண்பட்ட ஆர்வங்கள்
  • பொருளாதார செயல்பாடு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்துதல்
  • காடழிப்பு மற்றும் விவசாய விரிவாக்கத்தை சமநிலைப்படுத்துதல்
 4. வேளாண்மையில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களும் உயிர்ப்பல்வகைமையின் தாக்கங்களும்
  • தண்ணீர் பற்றாக்குறை
  • பயிர்கள் / திறன்கள் மற்றும் தழுவல் உத்திகளின் பல்வகைப்படுத்தல்
 5. மீன்பிடித் துறையில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களும் உயிர்ப்பல்வகைமையின் தாக்கங்களும்
  • மாற்று அணுகுமுறைகள் / வாழ்வாதாரங்கள்
  • இசைவாகஉத்திகள்
 6. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்கான மாற்று சக்தியின் பங்களிப்பு
  • கனிய எண்ணெய் வளங்களை  பாவிப்பதை தவிர்ப்பது சாத்தியமே!
  • பசுமை சக்தி மூலங்கள்: சமுதாய மாற்றத்தில் சூரிய சக்தியைப் பயன்படுத்துதல்
  • உயிரினத் தொகுதி மற்றும் பிற வடிவங்கள்
 7. பங்காளர்கள் மற்றும் அங்கீகாரம்
  • வணிக சமூகத்திற்கான நடைமுறை தீர்வுகள் அதாவது: “பசுமை வழிசெல்வதோடு லாபம் சம்பாதிப்பது”
  • உயிர் பல்வகைமை இழப்புகள் தொடர்பான சமுதாய பதக்கங்களை நிர்வாகித்தல்
 8. வெற்றிகரமான + தோல்வியுற்ற முன்முயற்சிகளின் வழக்கு ஆய்வுகள் (நடைமுறை செயற்பாடுகள் / குழு வேலை)
  • உள்ளூர் மற்றும் சர்வதேச உதாரணங்கள்
  • உலகளாவிய தந்திரோபாயங்களை அடையாளம் கண்டு இலங்கைக்கு சூழ்நிலைப்படுத்தல்

9. தொடர்புபடுத்தும் படிப்புகள் (நடைமுறை செயற்பாடுகள் / குழு வேலை)

  • சூழலுக்கும் வளர்ச்சியின் பிற பகுதிகளுக்குமிடையிலான தொடர்புகளை வரைபடத்தினூடாக கலந்துரையாடுதல்

10. சூழலும் அரசியலும்

  • ஒவ்வொரு உள்ளூர் சூழலுக்கேற்றவாறு விவசாயம் மற்றும் சூழல் தொடர்பான கலந்துரையாடல்களை அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளுதல்
  • அதிக ஆபத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து (மாலைதீவு), காலநிலை மாற்றத்துக்கான உகந்த நடவடிக்கைகளை எடுத்த தலைசிறந்த நாடாக இலங்கை