இந்த இயக்கம் வெளிநாட்டு அரசாங்கங்களின் நிதியுதவியை ஏற்றுக்கொள்வதில்லை என்பதுடன், அரசியல் கட்சிகளிடமிருந்தும், தற்போதைய அல்லது முன்னாள் அரசியல்வாதிகளிடமிருந்தும் நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதில்லை.
பெறப்பட்ட நன்கொடைகள் நூற்றாண்டு கல்லூரியினை தொழிற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுவதுடன் இதில் மாணவர்களுக்கான அநுசரணை வழங்கல், விரிவுரையாளர்களுக்கான வசதிப்படுத்தல், உரைபெயர்ப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், வளவாளர்கள் மற்றும் முழுநேர ஊழியர்களுக்கான செலவுகளை ஈடுசெய்தல் ஆகியவை உள்ளடங்குகின்றன.
உயர் செயல்திறன்களை வெளிப்படுத்தும் கல்லூரியின் மாணவர்களுக்கும் எங்கள் கொள்கைக் குழுக்களில் இணைந்துகொள்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும். அவர்கள் தங்கள் உலகக் கண்ணோட்டத்தையும் திறமையையும் மேம்படுத்திக்கொள்வதற்காக சர்வதேச ஆராய்ச்சி மற்றும் கற்றல் சுற்றுப்பயணங்களிலும் இணைந்துகொள்வர். ஒவ்வொரு மாணவருக்கும் மும்மொழி திறன்களை அடைந்துகொள்வதற்கான உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்.
எங்கள் மாணவர்கள் அரச துறை தொழில்வாய்ப்புகளுக்கு போட்டியிடுவதற்கும் பொதுத்துறையில் செல்வாக்கு செலுத்தும் நிலைகளுக்கு உயர்வடைவதற்கும் ஊக்குவிக்கப்படுவார்கள். அவர்களின் உன்னத அபிலாஷைகளை அடைந்துகொள்ளும் பொருட்டு வழிகாட்டல், வலையமைப்புகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளை நாங்கள் வழங்குவோம். பொதுத்துறையில் தொழில்வாய்ப்புக்காக போட்டியிடும் அல்லது பொதுத்துறையில் பணியாற்றும் நூற்றாண்டு கல்லூரியின் ஒவ்வொரு மாணவரும் உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் வகைபொறுப்புகூறுவதற்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதையும் நாங்கள் உறுதி செய்வோம். அவர்கள் நூற்றாண்டு இயக்கத்தின் உறுதிமொழி மற்றும் எங்கள் நெறிமுறைகளின்படி வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் சொத்த விபரங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி அவர்களின் பிரச்சார நிதிகளை வெளிப்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது தொகுதி மாணவர்களுக்கான விண்ணப்ப செயன்முறை டிசம்பர் 2021 இல் தொடங்கும். விவரங்கள் எங்கள் இணையத்தளத்திலும் (www.100.lk) எங்கள் சமூக ஊடக தளங்களிலும் வெளியிடப்படும்.
2022 பிப்ரவரி 4 ஆம் தேதி புதிய குழுவின் திசைமுகப்படுத்தல் மற்றும் அறிமுக நிகழ்வு இடம்பெறும்.